ETV Bharat / state

தீப திருவிழா - ஏழாவது நாளான இன்று ஐந்து தேர்கள் பவனி! - Therottam pavani

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.

thiruvannamalai-deepam
thiruvannamalai-deepam
author img

By

Published : Dec 7, 2019, 10:42 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. 7ஆவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி தேரோட்டம் நடைபெற்றது. அதில் முதலாவதாக விநாயகர் தேர் ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.

இதையடுத்து, மதியம் 3 மணியளவில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய தேர் எனப்படும் மகாரத ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளக்க, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இரவு மகாரதம் நிலையை அடைந்ததும் பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. இதனிடையே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி பிள்ளை பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்தையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

இதையும் படிங்க: சமுக்தியாம்பிகை அம்மனுக்கு 300 கிலோ பழச்சாறு அபிஷேகம்

Intro:தீபத்திருவிழாவின் ஏழாவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி.
Body:தீபத்திருவிழாவின் ஏழாவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழாவில் இன்று பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. அதில் முதலாவதாக விநாயகர் தேர் ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.

மதியம் 3 மணிக்கு மேல் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனிவரும் பெரியதேர் எனப்படும் மகாரத ஊர்வலம் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்களால் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளக்க, தேரை வடம்பிடித்து இழுந்தனர்.

இரவு மகாரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெறும்.

இதனிடையே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி பிள்ளை பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

மகா ரத தேரோட்டத்தை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Conclusion:தீபத்திருவிழாவின் ஏழாவது நாளான இன்று மகா தேரோட்டம் எனப்படும் 5 தேர்கள் பவனி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.