ETV Bharat / state

சிகிச்சைப்பெற்று திரும்பிய பிறவி இருதய நோயாளி; வரவேற்ற தி.மலை ஆட்சியர்

author img

By

Published : Oct 7, 2019, 10:19 AM IST

திருவண்ணாமலை: காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்று திரும்பிய பிறவி இருதய நோயாளியான பழங்குடியின சிறுவன் கோவிந்த ராஜை மாவட்ட ஆட்சியர் வரவேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Thiruvannamalai collector welcomes congenital heart patient who received treatment

திருவண்ணாமலை மாவட்டம் தண்டம்பட்டு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (16). இவர் பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக கோவிந்த ராஜ் குடும்பத்தினர் கடந்த திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேல் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்த எண்ணிய கோவிந்தராஜ் குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் முகாமிற்குச் சென்றனர்.

அவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அரசின் நிவாரண நிதிகள், பழங்கள், புத்தாடைகள் வழங்கிவரவேற்றார்.

இதையும் படிங்க: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: பயனடைந்த 600 பேர்!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டம்பட்டு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (16). இவர் பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக கோவிந்த ராஜ் குடும்பத்தினர் கடந்த திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேல் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்தார். சிகிச்சைகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்த எண்ணிய கோவிந்தராஜ் குடும்பத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் முகாமிற்குச் சென்றனர்.

அவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அரசின் நிவாரண நிதிகள், பழங்கள், புத்தாடைகள் வழங்கிவரவேற்றார்.

இதையும் படிங்க: தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: பயனடைந்த 600 பேர்!

Intro:பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் அவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் திரும்பினார், முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்.Body:பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் அவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் திரும்பினார், முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தண்டம்பட்டு கிராமம் இருளர் இனத்தைச் சேர்ந்த ஏழுமலை, சின்னப்பாப்பா தம்பதியினரின் 16 வயது மதிக்கத்தக்க மூத்த மகன் கோவிந்தராஜ் பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.1 லட்சம் ரூபாய் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் 3.4 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.5 லட்ச ரூபாய் செலவில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் திரும்பினார்.

கோவிந்தராஜ் சென்னையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருவண்ணாமலை அழைத்துவரப்பட்டார். கோவிந்தராஜ் மற்றும் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வரவேற்று புதிய துணி மற்றும் பத்தாயிரம் ரூபாய் அத்துடன் பழங்களையும் வழங்கினார்.

செங்கம் வட்டம் தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளி ஏழுமலை, சின்னப்பாப்பா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் கோவிந்தராஜ் பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்.

கோவிந்தராஜ் 4 வயது இருக்கும்போது அவருக்கு கை, கால் வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள், கோவிந்தராஜ் பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு செலவு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்கள்.

இவரின் குடும்ப வறுமை நிலை காரணமாக மகன் கோவிந்தராஜ்க்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் மன வேதனையில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஏழுமலை தனது குடும்பத்தினருடன் கடந்த திங்கட்கிழமை 16 09 2019 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது நிலை குறித்து எடுத்துரைத்து உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியரின் உடனடி நடவடிக்கையாக ஏழுமலை குடும்பத்தினர் கடந்த 18 9 2019 அன்று மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வரவழைக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு கோவிந்தராஜ் அவரது குடும்பத்தினருடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் கோவிந்தராஜ் 18 9 2019 அன்று அனுமதிக்கப்பட்டு 8 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்பு 25 9 2019 அன்று மருத்துவர் கணபதி சுப்ரமணியம், மருத்துவர் பிரதீப் குழுவினரால் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

கோவிந்தராஜ் சிகிச்சை மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.1 லட்சம் ரூபாய் மற்றும் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 3.4 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.5 லட்ச ரூபாய் செலவில் அளிக்கப்பட்டது.

கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் எனக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததால் சிகிச்சை செய்ய கலெக்டரிடம் உதவி கேட்டு அவர்கள் என்னை சென்னைக்கு அனுப்பி ஆபரேஷன் ஏற்பாடு செய்து நல்லபடியாக பார்த்துக்கிட்டாங்க. கலெக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.Conclusion:பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்ட கோவிந்தராஜ் அவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் திரும்பினார், முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.