தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் 'தீனதயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா' திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி கொடுக்கப்படுகிறது.
அதன்படி, இந்தத் தொழிற்பயிற்சிக்குத் தேர்வுசெய்யப்பட்ட 846 நபர்களை அந்தந்த பயிற்சி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பிவைக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொடியசைத்து அனுப்பிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா முன்னிலை வகித்தார். மேலும், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தமிழில் பெயர்ப் பலகைகள் அமைத்திடுங்கள்' - வீதிகளில் ஓங்கி ஒலித்த மாணவர்களின் குரல்