திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக 1,633 நியாய விலைக் கடைகளில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 281 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ. 152.26 கோடி செலவில், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சி , தேரடி வீதி , கற்பகம் கூட்டுறவு வளாகத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
முன்னதாக , மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி , சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜிதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!