ETV Bharat / state

'புவி வெப்பமயமாதலைத் தடுக்க மரங்களை வளருங்கள்' - தி.மலை ஆட்சியர் - 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை: விண்ணவனூர் கிராமத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

thiruvannamalai collector about tree plantation
author img

By

Published : Oct 21, 2019, 7:56 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராமநல சங்கம் சார்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் அளித்தல், அரசுப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், கிராமநல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்வது இயற்கையாகும். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த சீதோஷன நிலை இப்போது இல்லை, பூமி சூடாகியுள்ளது, சூரியனை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இதற்கு ஒரே தீர்வு பூமியை குளிர்விக்க வேண்டும் என்று கூறிய ஆட்சித் தலைவர், இதற்கு மரங்களை நட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பதனால் 40 சதவீகிதம் தண்ணீர் வீணாகுகிறது என்றார். மேலும், சுத்திகரிப்பு நிறுவனங்களால் தண்ணீரை உற்பத்தி செய்யமுடியாது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும், நாம் நமக்காக வாழாமல் கம்பெனிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

'நீங்கள் எப்படி உன் தாய் தந்தையைப் பாதுகாத்து என் முன் காண்பிக்கிறீர்களோ அப்படித்தான் உங்களை நான் பாதுகாப்பேன்' என்று இன்றைய மாணவர்கள் உங்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்று ஆட்சியர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுமார் ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி

Intro:நீ எப்படி உன் தாய் தந்தையை பாதுகாத்து என் முன் காண்பிக்கிறாயோ அப்படித்தான் உன்னை நான் பாதுகாப்பேன் என்று சொல்லுங்கள் மாணவர்களே, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.Body:நீ எப்படி உன் தாய் தந்தையை பாதுகாத்து என் முன் காண்பிக்கிறாயோ அப்படித்தான் உன்னை நான் பாதுகாப்பேன் என்று சொல்லுங்கள் மாணவர்களே, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் கிராமத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் விண்ணவனூர் கிராம நல சங்கம் சார்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், ரத்த தானம் வழங்குதல் மற்றும் அரசு பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்குதல் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள், கிராம நல சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்திருந்த பெருந்திரளான கூட்டத்திற்கு இடையே பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேசியதாவது,

நமது வாழ்க்கை ஆரோக்கியமாகவும் தரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்வது இயற்கையாகும். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த சீதோசன நிலை இப்போது இல்லை. பூமி சூடாகி உள்ளது. சூரியனை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரே தீர்வு பூமியை குளிர்விக்க வேண்டும். இதற்கு மரங்களை நட வேண்டும்.1 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பதனால் 40 சதவீதம் தண்ணீர் வீணாகுகிறது. சுத்திகரிப்பு நிறுவனங்களால் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் .நாம் நமக்காக வாழாமல் கம்பெனிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நீ எப்படி உன் தாய் தந்தையை பாதுகாத்து என் முன் காண்பிக்கிறாயோ அப்படித்தான் உன்னை நான் பாதுகாப்பேன் என்று இன்றைய மாணவர்கள் உங்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.Conclusion:நீ எப்படி உன் தாய் தந்தையை பாதுகாத்து என் முன் காண்பிக்கிறாயோ அப்படித்தான் உன்னை நான் பாதுகாப்பேன் என்று சொல்லுங்கள் மாணவர்களே, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.