ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - திருவண்ணாமலை காவல்துறை

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆசிப்ஜாவேத் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

author img

By

Published : Jun 9, 2023, 8:30 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் கடந்த மே மாதம் பிடிபட்ட நிலையில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில், கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த படைகள் கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பின் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத், குதரத் பாஷா, அப்சர் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் பின்னர், தொடர் வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினர், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதின் என்பவரை கர்நாடகா மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார், கடந்த மார்ச்சில் கைது செய்து கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார், முக்கிய குற்றவாளியைத் தேடும் பணியில் இறங்கி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் 6 உதவி ஆய்வாளர்கள் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைப் பகுதிக்கு இடையே இருக்கும் பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், ஒரு வாரம் முகாமிட்டு தீவிர முயற்சிக்கும் பின் ஆசிப்ஜாவேத் துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரிடமிருந்த 15 லட்சம் ரூபாய் மற்றும் 2 கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டம், பாதஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆசிப்ஜாவேத் என்பவர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீ.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், பிடிபட்ட ஆசிப்ஜாவேத் என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'தீரன்' பட பாணியில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது.. போலீசாருக்கு குவியும் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.