திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயிலிலுள்ள நந்தி பகவானுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறும்.
அதன்படி வரும் ஏப்.26ஆம் தேதி பவுர்ணமி வருவதையொட்டி, இன்று (ஏப்.24) அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்குப் பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தி பகவானுக்கு, அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரதோஷ விழாவையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.