திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினர், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரணி தாலுகா ஒட்டம்பட்டு பகுதியில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறல், அரசாணி பாளையம் பகுதியில் 150 லிட்டர் சாராயம் ஊறல், வசந்தபுரம் பகுதியில் 950 லிட்டர் கள்ளச் சாராய ஊறல், செங்கம் தாலுக்கா வலையாம்பட்டு பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல், ஜமுனாமரத்தூர் பகுதியில் 400 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 2430 லிட்டர் சாராய ஊறல்களும், விற்பனைக்காக வைத்திருந்த 1110 லிட்டர் கள்ளச் சாராயமும் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கண்ணமங்கலம், தளரபாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 31 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்கள் கடத்தலுக்காக வைத்திருந்த 8 இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனம் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய ஊரல்களை அடித்து நொருக்கிய போலீஸ்