ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்தன.
ஏப்ரல் 4ஆம் தேதி (நேற்று) முதல் 50 சதவீதம் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சூழலில், திருவண்ணாமலை நகரில் நேற்று பொதுமக்கள் கூட்டம் மற்ற நாட்களைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக, வைரஸின் தீவிரம் அறியாமல் முதியோர்கள் வங்கிகள் முன்பு அலைமோதிய காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதிலும், திருவண்ணாமலை நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு குவிந்த முதியோர்கள் கூட்டம் பார்ப்பவரை திடுக்கிட வைத்தது.
தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த காவல் துறையினர் அவர்களிடம் "டோக்கன் வழங்கப்படுகிறது ஆகையால் தகுந்த இடைவெளி விட்டு பொறுமையாகக் காத்திருந்து வங்கிக்குள் செல்லுங்கள்" எனத் தெரிவித்தனர்.
மேலும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வங்கி சேவையைப் பயன்படுத்த வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே வங்கியில் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க : 'ஆவின் நிறுவனம் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்' - ராஜேந்திர பாலாஜி