திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிப் பேருந்துகளையும் நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
பேருந்தில் அவசர கால வெளியேறும் பகுதி, தீயணைப்பான், பேருந்துகள் எவ்வாறு உள்ளது என்பவற்றை மாவட்ட ஆட்சியர் ஓட்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுடன் நடத்துநர்களுக்கும் தீயணைப்பான் கருவியை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
ஆய்வின்போது வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.