திருவண்ணமாலை மாவட்டம் குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தினகரன்(36). இவர் இன்று காலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஒடினர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவிடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.