திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களின் உத்தரவுப்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையில் டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து ஆங்குணம், எலந்தபட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில், ஆங்குணம் பகுதியில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், எலந்தபட்டு பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும் கைப்பற்றி அழிக்கப்பட்டன.
மேலும், திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சித்ரா தலைமையில், தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் பாரதி, டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து வேப்பூர்செக்கடி பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதையும் படிங்க : ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்