திருவண்ணாமலை: அடுத்து வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் தடம் எண் 214 பேருந்தும், சென்னையில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த தடம் எண் 208 பேருந்தும் கீழ்க்கொடுங்காலூர் அருகே நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தோர் காயம் அடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி கார்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைக்குச்சென்ற வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், நகராட்சி சேர்மன் ஜலால் உள்ளிட்டவர்கள் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.
இதையும் படிங்க:கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் சுவர் பூச்சு உதிரும் விவகாரம் குறித்து அமைச்சர் ஏ.வ வேலு