திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரை அடையாளம் தெரியாத நபர்கள் தென் மாதிமங்கலம் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை இயந்திரத்தில் தொங்கியபடி அடித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கடாலடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் வார்டு உறுப்பினராக சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதனால் துணைத் தலைவர் பதவிக்காக கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: