திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பிரதான சாலையில் இந்தியன் வங்கி ஏடிஎம் மற்றும் பின்பகுதியில் இந்தியன்வங்கி கிளையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்மில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிசிடிவியில் காட்சி பதிவாகாமல் இருக்க கருமையான நிறம் கொண்ட திரவத்தை தெளித்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏடிஎம்மில் பணம் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. அதனால் நல்வாய்ப்பாக கொள்ளை சம்பவம் நடைபெறவில்லை. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.