திருவண்ணாமலை மாவட்டம் புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்க முறையாக தகவல் அறிவிக்காத நிலையில் ஒரே நேரத்தில் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணியாமல் 300க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இதனால், கரோனா பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள நடைமுறைகள் கேலிக்கூத்தாக மாறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூட்டமாக நின்ற மக்களை அப்புறப்படுத்தினர்.
கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் நடைபெறாததால், 50 விழுக்காடு ஆள்களை கொண்டு 100 நாள் வேலை பணி செய்ய அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் இன்று 100 நாள் வேலை செய்ய முறையான தகவல் பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் விளைவாக ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் மூன்று தவணையில் கட்டணம் வசூலிக்க அனுமதி!