ETV Bharat / state

தி.மலையில் புதியதாக 2 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைப்பு! - Thiruvannamalai district

திருவண்ணாமலை: ஆட்சியர் அலுவலகத்தில் புதியதாக 2 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முதலமைச்சரின் வருகையையொட்டி நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தார்.

minister
minister
author img

By

Published : Sep 8, 2020, 1:50 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டுவரும் நிலையில் மேலும் புதியதாக 2 ஆம்புலன்ஸ் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய சேவையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

வருகின்ற செப். 9ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவும் வருகைதரவுள்ளார்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வுமேற்கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து அமைச்சர், திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற 12 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விருது, சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கலந்துகொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.