ETV Bharat / state

மக்களின் பசியை போக்கும் இறைவனின் சமயலறை: நிதியுதவி அளித்த நபருக்கு பாராட்டு!

திருவண்ணாமலை: இறைவனின் சமயலறை திட்டத்திற்கு சையத் ஜஹிருத்தின் தனது மகன், மகள் மற்றும் தந்தை ஆகியோர் சேமித்து வைத்திருந்த 5ஆயிரம் ரூபாயை ஆட்சியர் கந்தசாமியிடம் வழங்கினார்.

iraivanin smayalarai
iraivanin smayalarai
author img

By

Published : Sep 25, 2020, 9:11 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் குறதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள், வாட்ஸ் அப் மற்றும் கடிதம் மூலம் தங்களது குறைகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கரோனா தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், குறை தீர்வு நாள் முகாமாக நடைபெற்று வருகிறது.

குறை தீர்வு முகாமிற்கு மனுக்கள் அளிக்க வரும் மக்களில் சிலர் சுமார் 60 முதல் 110 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பயணித்து வருகின்றனர். இதில், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பசியால் வாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களது கவலைகளை போக்க ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "இறைவனின் சமயலறை" என்ற புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நிதியுதவி அளித்தவருக்கு பாராட்டு
நிதியுதவி அளித்தவருக்கு பாராட்டு

இந்த இறைவனின் சமயலறையில் திங்கள் கிழமை மட்டும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்துள்ள இந்த திட்டமானது அனைத்து மாவட்டத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. மேலும், இறைவனின் சமயலறைக்கு நிதி வழங்க விரும்புவோர் நிதியளிக்கலாம். சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். இதன் மூலம் வெகுதூரம் பயணித்து வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வயிறும், மனதும் நிறையும் என்று ஆட்சியர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.

நிதியுதவி அளித்த மாணவ செல்வங்கள்
நிதியுதவி அளித்த மாணவ செல்வங்கள்

இந்நிலையில், இறைவனின் சமையலறைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சையத் ஜஹிருத்தின் என்பவர் தனது மகள், மகன் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் தனது தந்தையின் சேமிப்பு பணம் என 5ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் கந்தசாமி சையத் ஜஹிருத்தின் குடும்பத்தினரை பாராட்டினார்.

இதையும் படிங்க: கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.