திருவண்ணாமலை: ஆரணி அடுத்த ஆத்துவம்பாடி கிராமத்தைச்சேர்ந்தவர் மாடசாமி. மாட்டு வியாபாரியான இவர், நேற்று (ஆக.24) மாலை அந்தப்பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி குடித்துவிட்டு, மது போதையில் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.
இதில், இருசக்கர வாகனம் மளமளவென பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்தபோது அவர்களை தீயை அணைக்கவிடாமல் மாடசாமி தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், தீயை அணைக்க முயற்சித்த நபர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், தீ வாகனம் முழுவதும் பற்றி எரிந்து தீயில் கருகி சாம்பல் ஆனது.
இதையும் படிங்க: நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 இளைஞர்கள் கைது...