ETV Bharat / state

‘குப்பை வரி வசூல்... கந்துவட்டி வசூல் போல் உள்ளது’ - வியாபாரிகள் சங்கம் கடையடைப்பு! - கந்துவட்டி

திருவண்ணாமலை: குப்பை வரியாக அதிகபட்ச ரூபாய் வசூலிப்பதை கண்டித்தும், வியாபாரிகளை மிரட்டும் தொனியில் நகராட்சி ஊழியர்கள் வசூல் செய்வதை கண்டித்தும் வரும் சனிக்கிழமை முழு கடையடைப்பு நடைபெறும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

‘குப்பை வரி வசூல்... கந்துவட்டி வசூல் போல் உள்ளது’

author img

By

Published : Mar 10, 2020, 11:56 PM IST

திருவண்ணாமலை நகராட்சி குப்பை வரி அதிகபட்ச ரூபாய் வசூலிப்பதை கண்டித்தும், வியாபாரிகளை மிரட்டும் தொனியில் நகராட்சி ஊழியர்கள் வசூல் செய்வதை கண்டித்தும் விக்கிரமராஜா தலைமையில் திருவண்ணாமலை நகர வியாபாரிகள் முழு கடையடைப்பு நடைபெறும் என அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகளின் வரி வசூல் அத்துமீறலை எடுத்துக் கூறும் விதமாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தனக்கோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாதாள சாக்கடை, குழாய் வரி, திடக்கழிவு வரி ஆகியவை பல மடங்கு உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் முன் தேதியிட்டு, ஒரே நேரத்தில் வசூலிக்கின்றனர்.

குப்பை வரி 2016 முதல் உள்ளது, மற்ற மாவட்டங்களில் 10 ரூபாயில் தொடங்கி 500 ரூபாயில் முடிக்கின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் மூன்றாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் என ஏகத்துக்கும் வசூல் செய்கின்றனர். வசூல் செய்வதை பழிவாங்கும் வகையில் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். பலமுறை ஆணையரிடம் முறையிட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. வரி வசூல் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் முறையான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். நான்காண்டு குப்பை வரி லட்சக்கணக்கில் போடப்பட்டு வருகிறது, இதை கண்டிக்கும் விதமாக வருகிற 14ஆம் தேதி திருவண்ணாமலை முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்த வரி வசூல் செய்யும் முறை, மிரட்டி கந்துவட்டி வசூல் செய்வதைப் போல் உள்ளது. தமிழகத்திலேயே திருவண்ணாமலையில்தான் வரிவசூல் அதிகமாக செய்யப்படுகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. இது வணிகர்களுக்கான போராட்டம் அல்ல, பொது மக்களுக்கான போராட்டம் என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.