காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுப்பிரியர்கள் முன்னதாகவே, நேற்று மதுபாட்டில்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
இரவு 8 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி விற்பனை செய்தனர்.
இன்று திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினர் சும்மா நின்று வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
கரோனா தொற்றை மறந்து மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள் - டாஸ்மாக்
திருவண்ணாமலை: மதுக்கடைகளில் நேற்று (அக். 1) மதுப்பிரியர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்து கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.