ETV Bharat / state

ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்! - tamilnadu latest news

திருவண்ணாமலை: பிப்ரவரி 20ஆம் தேதி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 9, 2021, 3:23 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட் ராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவரும் ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளருமான மோசஸ் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். பிப்ரவரி 20ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பை அகற்றி தாருங்கள் - ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.