ETV Bharat / state

உடல் சிதறிய நிலையில் உயிரிழந்த பசுக்கன்று - பொதுமக்கள் அச்சம்! - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்

திருவண்ணாமலை: அடையாளம் தெரியாத விலங்கு கடித்து உடல் சிதறி பசுக்கன்று உயிரிழந்த சம்பவம், மங்கலம் அடுத்துள்ள ராந்தம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

suspicious animal bite calf death tiruvannamalai  calf death in thiruvannamalai  திருவண்ணாமலை செய்திகள்  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
உடல் சிதறிய நிலையில் உயிரிழந்த பசுக்கன்று: பொதுமக்கள் அச்சம்
author img

By

Published : May 7, 2020, 11:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த ராந்தம் கிராமத்தில் விவசாய நிலத்தின் அருகே கட்டிவைத்திருந்த பசுக்கன்றை அடையாளம் தெரியாத விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் அந்தக் கிராமத்தில் நடைபெறாததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். உடல் சிதறிய நிலையில், உயிரிழந்து கிடந்த பசுக்கன்றை பார்த்த அதன் உரிமையாளர் காந்தி மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பசுக்கன்று உயிரிழக்க காரணமான விலங்கு எது என்பதைக் கண்டறியவேண்டும் என்றும்; அந்த விலங்கைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். உடல் சிதறிய நிலையில் பசுக்கன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் - தொடர்பு கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.