ETV Bharat / state

அடிப்படை வசதிகள் வேண்டும் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவண்ணாமலை: மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

students protest demand basic facilities in student hostel
மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
author img

By

Published : Jan 23, 2020, 11:55 PM IST

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகவும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் இன்று வேட்டவலம் சாலையில் உள்ள விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், விடுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

Intro:மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்Body:மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் அமைந்துள்ள, அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் இன்று வேட்டவலம் சாலையில் உள்ள விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், விடுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Conclusion:மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.