திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.
பின்னர் 100 விழுக்காடு வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது, டிஆர்ஓ முத்துக்குமாரசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர் சந்திப்பு பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.இதையும் படிங்க: வேளாண் பாசனத்திற்காக சாத்தனூர் அணை திறப்பு!