திருவண்ணாமலை: பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த சகாயம் இன்பசேகர் என்பவரது மகன், செல்வ பிரவீன். இவர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அம்மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, பவித்திரம் கூட்டு சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிராமிய காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக, மாணவர் செல்வ பிரவீன், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்..! திருவண்ணாமலையில் நடப்பது என்ன?
இதனிடைய இருவருக்கும் பேச்சுவார்த்தை இருந்து வந்த நிலையில், வழக்கம்போல் அந்த பெண்ணிற்கு தொலைபேசியில் அழைத்தபோது, பெண்ணின் தாய் தொலைபேசியை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பெண்ணின் தாய் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக வெறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் உடல் உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆய்விற்குப் பின்னர், மீண்டும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்..! திருவண்ணாமலையில் நடப்பது என்ன?