திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு, சென்னசமுத்திரம் பீட் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்(37), தினேஷ் (21), காத்தாடி (30). இவர்கள் மூவரும் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சி.கே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கடத்தி வந்த கொள்ளையர்களை வன அலுவலர்கள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். அதன்பின், மூவர் மீதும் காவல் துறையினர் மணல் திருட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க:
விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ரூ 11 லட்சத்திற்கு ஏலம்