சென்னை: தமிழ்நாட்டில் பண்டிகை நாள்களின் போது அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் லஞ்சமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செப்.30) திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.27 லட்சம் பணம் சிக்கியது.
திருவண்ணாமலையில் ரூ.3.5 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினத்தில் ரூ.70,500 பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத 70 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இயல்பைவிட இந்தாண்டு பருவமழை அதிகரிப்பு!