ETV Bharat / state

புழு பூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்தும் மாணவர்கள் - நோய் தொற்று அபாயம் - திருவண்ணாமலை செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளியில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீரை பயன்படுத்தாமல் பாசிபடர்ந்த புழுபூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்துவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மாணவர்களுக்கு பாசிபடர்ந்த புழு,பூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்துவதால் நோய்தொற்று அபாயம்!

author img

By

Published : Oct 10, 2022, 8:37 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் குடிப்பதற்கு சுத்தமான குடிநீரை பயன்படுத்தாமல் பாசிபடர்ந்த புழுபூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்துவதால் நோய்தொற்று அபாயம் உள்ளது.

இதனை சிறிதும் கண்டுகொள்ளாமலும் ஆசிரியர்களின் தேவைகளுக்கு மட்டும் சுத்தகரிக்கபட்ட குடிநீரை வெளியில் இருந்து வாங்கி அருந்தி வருகின்றனர். மேலும் இதே நீரில் தான் மாணவர்களுக்கு உணவை சமைத்து வழங்கி வருகின்றனர்.

பலமுறை பெற்றோர்கள் இதனை பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் மாணவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாணவர்களுக்கு பாசிபடர்ந்த புழு,பூச்சிகள் மிதக்கும் நீரை பயன்படுத்துவதால் நோய்தொற்று அபாயம்!

ஏற்கனவே பள்ளியில் மாணவர்களிடையே ராக்கிங் ,கஞ்சா பிடிக்கும் பழக்கம் என பல புகார்கள் எழுந்த நிலையில் பள்ளிமாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருக்கும் தலைமை ஆசிரியரை பணியிடை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:அக்டோபர் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் - மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.