திருவண்ணாமலை: ஆரணி டவுனில் இயங்கி வந்த ஸ்ரீ பாலாஜிபவன் என்ற உணவகத்தில் காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர் வாங்கி சென்ற உணவு பார்சல் சாப்பாட்டில் எலி தலை இருந்ததாக 25க்கும் மேற்பட்டோர் உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து எலி தலை இருந்ததன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் திடீரென உணவகத்தில் பல எலிகள் சுற்றி திரிந்த காரணத்தால் படிவம் 32 என்ற படிவத்தை உணவகத்திற்கு வழங்கினார்.
இதனையடுத்து நேற்று ஆரணிக்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் ஸ்ரீ பாலஜி பவன் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரையில் திறக்ககூடாது என்று கூறி உணவக கதவில் நோட்டீஸ் ஓட்டி சென்றனர்.
இதையும் படிங்க: சூதாட்டத்தில் ஈடுபட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு...