ETV Bharat / state

கரோனா முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி!

திருவண்ணாமலை: வெளியூரிலிருந்து வந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கிரிவலப்பாதையில் உள்ள கரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு புத்துணர்ச்சி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

relief camp refreshment  thiruvannamalai relief camp refreshment  கரோனா முகாம் புத்துணர்வு பயிற்சி  திருவண்ணாமலை புத்துணர்வு பயிற்சி  கரோனா முகாம்  Corona relief camp
Corona relief camp
author img

By

Published : Apr 22, 2020, 3:50 PM IST

திருவண்ணாமலையில் ஊரடங்கை ஒட்டி கிரிவலப்பாதையில் உள்ள சாந்தி மலை ஆசிரமத்துக்குச் சொந்தமான இடத்தில் வெளியூரில் இருந்து வந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள், ஆதரவற்றோர், மனநோயாளிகள், முதியோர் உள்பட 49 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் தேதி முதல் மனநல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் காலை, மாலை இரு வேளைகளில் தியானம், யோகா, கும்மி பாட்டு பாடுதல், நடனமாடுதல், தனித்திறன் வெளிப்படுத்துதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனால், அவர்கள் உற்சாகமடைந்து மகிழ்ச்சியாக உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் சாந்தமாகி தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்கின்றனர். இவர்களை மாவட்ட சமூக நல அலுவலர் கிருஷ்ணா டார்த்தி, சமூகநலத்துறை அலுவலர் சாந்தினி, பயிற்சியாளர் முத்துசெல்வம், தன்னார்வலர் நாகராஜ் ஆகியோர் நன்றாக கவனித்து வருகின்றனர்.

புத்துணர்வு பயிற்சி

அனைவரும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இங்கு தற்போது தங்கியுள்ள 25 ஆதரவற்றோர் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கு தங்கி இருப்பவர்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும் தினமும் குளித்து ஆரோக்கியமாக இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மூன்று வேளை உணவும் இரண்டு வேளை தேநீரும் வழங்கப்படுகின்றன. முகாம் சிறப்பாக செயல்பட சாந்தி மலை ஆசிரமம் நிர்வாகம் தேவையான உதவிகளை செய்துவருகின்றது. இங்கு செயல்படுவது போல், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் கரோனா நோய்த் தொற்று சிறப்பு முகாம்களிலும் மனநலப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பால் உற்பத்தியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.