திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அயராது பணியிலிருக்கும் காவல் துறையினரின் பாதுகாப்புக்காக ரெட் கிராஸ் அமைப்பு, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை சார்பில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இவற்றை காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ், காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா ஆகியோர் முன்னிலையில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டன.
அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்த பொதுமக்களுக்கும் இலவசமாக முகக்கவசங்கள், கிருமி நாசினி மருந்து ஆகியவை வழங்கப்பட்டன. கரோனாவிலிருந்து தங்களைக் காப்பாற்றி தனிமைப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களும் அளிக்கப்பட்டன.