ETV Bharat / state

'ஜல் ஜீவன்' திட்டத்தில் பைப்பே இல்லாமல் அமைக்கப்பட்ட வெற்றுக்குழாய்கள்! - பைப்புகள் இல்லாமல் அமைக்கப்பட்ட குழாய்கள்

திருவண்ணாமலையில் ஒன்றிய அரசின் 'ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கப்படாமல், வெறும் வெற்றுக் குழாய்கள் மட்டுமே அமைத்த சம்பவத்தை இளைஞர் ஒருவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஒன்றிய அரசின் ’ஜல் ஜீவன்’ திட்டத்தில் பைப்பே இல்லாமல் அமைக்கப்பட்ட வெற்று குழாய்கள்..!

author img

By

Published : Nov 22, 2022, 7:07 PM IST

Updated : Nov 23, 2022, 3:21 PM IST

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு வட்டம், இந்திரவனம் கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன்’(Jal Jeevan Mission) திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 12 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

2022-2023ஆம் நிதி ஆண்டில் 15ஆவது நிதிக்குழு மாநிலத்தின் மூலம் இந்திரவனம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு 104 குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்த 104 குழாய்கள் அமைக்கும் பணிக்காக 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இதன்படி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் பதிக்கும் பணிகள் அமைத்து குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இந்திரவனம் கிராமத்தில் குழாய் பதிக்கும் பணிகள் அமைக்காமலேயே ஒவ்வொரு வீட்டின் முன்பாக, இரண்டு அடி பள்ளம் தோண்டி குழாய்கள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தற்போது கிராமத்து இளைஞர் ஒருவர் குழாய் பதிக்காமல், குழாய் மட்டும் அமைத்துள்ளனர் என்று வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 104 குழாய்கள் அமைக்கும் பணிக்காக 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் பதிக்காமல் குழாய் மட்டும் அமைத்தால் குடிநீர் எவ்வாறு கிடைக்கும் என்றும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியதுடன்; இந்த குழாய் அமைக்கும் பணிகளை அரசு அலுவலர்கள் எவரும் தற்போது வரை நேரில் வந்து பார்க்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒன்றிய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்படாமல் அமைக்கப்பட்ட வெற்றுக்குழாய்கள்!

உடனடியாக தங்கள் கிராமத்திற்கு முறையான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று மற்றும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்பதே இந்திரவனம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து தற்காலிக நீக்கம்; சூர்யா சிவாவுக்கு தடை!

Last Updated : Nov 23, 2022, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.