திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் தனியார் வணிக வளாகத்தில் புதிதாக உயர்தர டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடை திறக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று (பிப்.22) வேட்டவலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பள்ளி அருகே வைக்க டாஸ்மாக் ஒன்றும் புத்தகக்கடை அல்ல!