திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாபட்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தடாரபட்டு கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தங்களுக்கு அடிப்படை தேவைகளான சாலை, வீடு, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை. குடியிருக்க வசிப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தடாரபட்டு கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாகவும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தரவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம்!