ETV Bharat / state

இருளில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை.. மின்விளக்கு பொருத்த தி.மலை மக்கள் கோரிக்கை - காவல் கண்காணிப்பாளர்

பகல் நேரத்திலேயே இரவு போல் இருளில் மூழ்கி கிடக்கும் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Public demand to install electric light in dark railway tunnel
இருளில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு பொருத்த பொதுமக்கள் கோரிக்கை
author img

By

Published : Feb 22, 2023, 8:35 PM IST

இருளில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்கு பொருத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: வேங்கிக்கால் பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக ரயில்வே பாதையைக் கடந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மத்திய கூட்டுறவு வங்கி, மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், வருமான வரி அலுவலகம், காவல்துறையைக் குடியிருப்பு, வேளாண்மைத் துறை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அரசு ஊழியர்கள் ரயில்வே பாதையைக் கடந்து சென்று தான் தங்களது பணியை மேற்கொண்டு வந்தனர்.

அவ்வாறு ரயில்வே பாதையைக் கடந்து செல்லும்போது ரயில் வரும் நேரங்களில் தடுப்புகள் அமைப்பதால் உரிய நேரத்திற்கு பணிக்குச் செல்ல இயலாமல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரயில் தண்டவாளத்தின் அடியில் பள்ளம் தோண்டப்பட்டு சுரங்கப்பாதை அமைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றுவர வழி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது பெய்த கனமழையின் காரணமாகச் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் வாகன ஓட்டைகள் பெரும் சிரமத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மழை நீர் சுரங்கப்பாதையில் தேங்காத வண்ணம் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதைக்கு மேல் கனமான இரும்புகளைக் கொண்டு மேற்கூரையை அமைத்தனர். இதனால் பகல் நேரத்திலேயே சுரங்கப்பாதையில் இரவு போல் காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சுரங்கப்பாதையில் சிறு மின்விளக்குகள் கூட இல்லாமல் கடும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு பணிக்குச் செல்லும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அனுதினமும் பயந்து பயந்து பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக ஆன்மிக நகரமான திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுதினமும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்து வரும் நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் இருந்து வருகிறது.

வடமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றிருக்கும் இந்த நிலையில் இருளில் பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையிலும், குற்றச் சம்பவம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக ரயில்வே நிர்வாகம், ரயில்வே சுரங்கப் பாதையில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருடிய பணத்தை எண்ணுவதற்கு கஷ்டம்.. சாலையில் கொட்டிச்சென்ற சோம்பேறி திருடர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.