திருவண்ணாமலை: ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளேரி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் இன்று (அக்.2) நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்ரமணியனிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, "இந்திய அளவில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வெள்ளேரி பஞ்சாயத்தில் மொத்தம் 412 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
100 விழுக்காடு குடிநீர் வழங்கும் பணி முடிக்கப்பட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஊராட்சிகளில் வெள்ளேரி கிராம ஊராட்சியும் ஒன்றாகும்" என்றார்.
தொடர்ந்து அவர் ஆரணி பட்டுச் சேலை தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்