திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலைக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி சிலைக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சி அளித்தார்.
கரோனோ கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.