திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள காரப்பட்டு என்ற ஊரில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அப்பகுதி மக்கள் மஞ்சு விரட்டுப் போட்டியை வெகு விமரிசையாக நடத்தினர்.
இந்த மஞ்சு விரட்டுப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்குபெற்றன.
அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, பாதுகாப்பில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு போட்டியை அப்பகுதி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தனர். இந்த மஞ்சு விரட்டுப் போட்டியில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: மாட்டுப் பொங்கல் விழா: மஹாராஷ்டிரா, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கயிறுகள் விற்பனை