திருவண்ணாமலை நகரின் சின்னக்கடை தெருவில் உள்ள ஹரிஷ் லைட் ஹவுஸ் எலக்ட்ரிக்கல் சாதனங்கள் விற்பனை செய்யும் கடைக்கு பிச்சாண்டவர் பார்சல் சர்வீஸ் மூலம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று காலை பார்சல் மூலம் 560 எலக்ட்ரிகல் லைட் ஹோல்டர்கள் இறக்கி வைக்கப்பட்டன இதன் மதிப்பு ரூபாய் 11,230 ஆகும்.
இதனை எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வந்து பார்த்தபோது அவை இல்லாததால் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பார்சலை எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சியின் வீடியோ ஆதாரத்தை வைத்து குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த ஈராடி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருந்த வேலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் சதீஷ்(21) என்பவர் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் மூலம் சிசிடிவி கேமரா அனைத்து கடைகள், வீடுகளில் பொருத்தி இருந்தால் திருட்டு சம்பவங்கள் குறைக்கவும் திருடிய பொருட்களை விரைவில் கண்டுபிடித்து மீட்டெடுக்கவும் எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 560 லைட் ஹோல்டர்களை பறிமுதல் செய்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.