திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தின் உத்தரவின்படி, தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல் துறையினர், திருவண்ணாமலை தீபம் நகர் சந்திப்பில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தாலுக்கா, விலண்டை கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் முருகன் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ஏற்கனவே ஒன்பது கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர் தனியாக செல்பவர்களிடமிருந்து மோதிரங்களை குறிவைத்து திருடுபவர் என்றும் அவரிடமிருந்து 8 சவரன் கொண்ட 9 மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.