ETV Bharat / state

பணிதள பொறுப்பாளரை பணியிடை நீக்கக்கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை: 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுவரும் பணிதள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை முறைகேட்டில் ஈடுபட்டுவரும் பணிதள பொறுப்பாளரை  நீக்க கோரி சாலை மறியல்

author img

By

Published : Aug 6, 2020, 6:44 PM IST

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு ஊராட்சியை சேர்ந்த தென் அரசம்பட்டு கிராமத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மூலம் செயல்படும் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக பணிபுரியும் சுதா என்பவரை மாற்றக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில்,

"100 நாள் வேலைத்திட்டத்தில் பணிதள பொறுப்பாளராக கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வரும் சுதா என்பவர், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பணிதள பொறுப்பாளர் சுதாவுக்கு திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உறுதுணையாக உள்ளார்" என்றனர்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.