திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக செல்வி சீனிவாசன் பொறுப்பு வகித்துவருகிறார். இந்த ஊரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டுவருகிறது.
கரியமங்கலம் ஊராட்சியில் வசந்தா பாஸ்கரன் என்பவர் மக்கள் நலப்பணியாளராக வேலை செய்துவருகிறார்.
இவர் பணியில் இருக்கும்போது முறைகேடாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதல் இல்லாமலேயே போலியாக அட்டை தயார்செய்து அதை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து அதற்காகப் பணமும் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
இந்த முறைகேட்டை செல்வி சீனிவாசன் கண்டுபிடித்து, வசந்தாவை பணியிலிருந்து நீக்கம்செய்துள்ளார்.
இதனையடுத்து செல்வியை பழிவாங்கும் நோக்கில், நேற்று (ஜூன் 12) வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வசந்தா கரியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வியின் கணவர் சீனிவாசன் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் பணியில் மீண்டும் சேர வேண்டுமென்றால் ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாகப் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த கரிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவரது கணவன் மீது வீண் பழி சுமத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் மக்கள் நலப்பணியாளர் வசந்தா அவதூறாகப் புகார் கொடுத்ததாகவும் கூறி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.
மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உண்மையான தகவலைப் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், தனது கணவர் மீது வீண்பழி சுமத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வி கோரிக்கைவிடுத்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கையால் மக்கள் நலப்பணியாளர் செய்த காரியம்...!
திருவண்ணாமலை: 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் போலி கணக்கு காட்டியதற்கு நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவன் மீது மக்கள் நலப்பணியாளர் அவதூறு புகார் தெரிவிப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.