ETV Bharat / state

ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர் பணியிடை நீக்கம் - suspended

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பொறுப்பாளர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Jul 21, 2021, 6:56 AM IST

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு வட்டம் அழகிரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(46). இவர், தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏழு வருடங்களாக விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்தார்.

ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளுக்கு உரிய பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விற்பனை நிலையத்தில் உள்ள அலுவலர்களிடம் முறையிட்டனர்.

விவசாயிகளிடம் மோசடி

இதுதொடர்பாக வேளாண் விற்பனைக்குழு செயலாளர் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து (ஜூலை 17) கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மே மாதம் 5 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை 159 விவசாயிகளிடம் 5081 நெல்மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் அவர் பெற்றுள்ளதும், அதற்கான உரிய தொகை 53 லட்சத்து 71 ஆயிரத்து 142 ரூபாயை விவசாயிகளுக்கு தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொறுப்பாளர் பணிநீக்கம்

இந்த விவகாரத்தில் தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்த பெ. ரோகேஷ் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து நேற்று (ஜூலை 20) சென்னை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் மு.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் வசூல்... அலுவலர்கள் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.