ETV Bharat / state

உடல் உறுப்புகள் தானம்: மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சென்னைக்கு விரைந்தது - சென்னை வேலூருக்கு உடல் உறுப்புகள் தானம்

திருவண்ணாமலை அருகே மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
author img

By

Published : Feb 21, 2023, 4:49 PM IST

திருவண்ணாமலை: குன்னத்தூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சரவணன் (39). திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி போளூர்-ஆரணி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சரவணனுக்கு நேற்றிரவு (பிப்.20) மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி சரவணனின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. சரவணன் மூளைச்சாவு அடைந்தாலும், தானமாக வழங்கப்பட்ட அவரது உடலுறுப்புகள் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்கள், சரவணனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வழக்கமாக வேலூரில் இருந்து சென்னைக்கு செல்ல 3 மணி நேரமாகும் நிலையில், 1.30 மணி நேரத்தில், தானமாக வழங்கப்பட்ட இதயத்தை ஆம்புலன்சில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் இதயத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதால், திருவள்ளூர் மாவட்டம் திருமலைவாசலில் இருந்து கிரீன் காரிடர் மூலம் போக்குவரத்து சீரமைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி விசாரணை - ஆசிரமத்தில் இருந்தோர் கடலூர் காப்பகத்திற்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.