திருவண்ணாமலையை சேர்ந்த வெங்கடேசன் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் நேற்று (அக். 2) பாலானந்தல் கிராமம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவலூர்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் பாலானந்தல் கூட்ரோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த காரில் பயணம் செய்த கரடிகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கலைவாணி மற்றும் 2 குழந்தைகள் உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவில்பட்டி அருகே புதுப்பிக்கப்பட்ட வி.ஏ.ஓ அலுவலக கட்டடத்தின் மேற்கூரை மீண்டும் சேதம்