திருவண்ணாமலை அடுத்த வெறையூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு இளைஞர் முன்னணி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் நடிகர் சூர்யாவை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட இந்து இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் கண்டன கோஷங்களும் முழக்கங்களையும் எழுப்பினர்
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அருண் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் கூறுகையில், "நடிகர் சூர்யா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், மாணவர்களின் மனதில் இருக்கும் தன்னம்பிக்கையை சிதைக்கும் விதமாக பேசி, வருங்காலத் தூண்களாக வளர்ந்து வரும் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க கூடாது. மாணவர்களின் மத்தியில் தற்கொலை எண்ணத்தை தூண்டிவிட்டு அவர்களின் வாழ்க்கையை அழிக்கக் கூடாது. நீட் தேர்வு குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து விளம்பரம் தேட நினைக்கும் சூர்யா அவரது நடிப்பை மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும்!. மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களின் பெற்றோர்தான் முடிவு எடுக்க வேண்டும், சூர்யா போன்ற நடிகர்கள் தனிமனிதர்களுக்கான கருத்தைக் கூறி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது."தொடர்ந்து, நடிகர் சூர்யா குறைந்தபட்சம் நீட் என்ற வார்த்தைக்கான முழு விளக்கத்தையும் அவரால் அளிக்க முடியுமா, அதனை முதலில் அளித்துவிட்டு பின்பு மற்ற விமர்சனங்களை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும்” என்றார்.இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூர்யா ரசிகர்கள் மனு!