ETV Bharat / state

கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் 7 பேருக்கு கரோனா! - திருவண்ணாமலை

திருவண்ணாமலை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் 7 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

nurses found with corona
nurses found with corona
author img

By

Published : May 28, 2020, 3:04 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றிய செவிலியர் 7 பேர், மும்பையில் இருந்து வந்த 7 பேர், கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர், சென்னையிலிருந்து வந்த 4 பேர், திருச்சி 1, காஞ்சிபுரம் 1 என மொத்தம் 21 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளதால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 264 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத் துறையினர்
சுகாதாரத் துறையினர்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் அரசு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறையினர்
சுகாதாரத் துறையினர்

செவிலியரின் வீடுகள் உள்ள பகுதிகளான திருவண்ணாமலை அடுத்த தென்றல் நகர் 4 வது தெரு, தாமரை நகர் நான்காவது தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பவித்ரம், தீபம் நகர், நேதாஜி நகர், தேனிமலை உள்ளிட்டப் பகுதிகளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு தூய்மைக் காவலர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, குளோரின் பவுடர் வீதிகள் முழுவதும் வீசப்பட்டன.

அவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்களோ அந்த நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை சுகாதாரத் துறையினர் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 81 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.