திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு பகுதியில் செய்யாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பாலத்தை பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பாலம் மிக குறுகலாக இருந்ததாலும் போக்குவரத்து அதிகரித்ததாலும் மாற்று பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 2.20 கோடி ரூபாய் மதிப்பில் 31.28 மீட்டர் நீளம் கொண்ட பாலம் டெண்டர் விடப்பட்டு புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், நேரடியாக பாலம் திறப்பதற்கு செங்கம் பகுதி அதிமுகவினர், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் அமுதா அருணாச்சலம் ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்!