ETV Bharat / state

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா

author img

By

Published : Oct 20, 2020, 1:28 PM IST

திருவண்ணாமலை: அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக தொடங்கி மூன்றாம் நாளில் அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அருணாச்சலேஸ்வரர்
அருணாச்சலேஸ்வரர்

நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னிஸ்தலமாகவும் விளங்கக் கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நவராத்திரி 3ஆம் நாள் உற்சவம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

முன்னதாக பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அம்பாளுக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

பூஜை குருக்கள் கோகுல் சிவாச்சாரியார், கஜலட்சுமி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க, கணேசன் ஓதுவார் திருமுறை பாடல்கள் பாட, சோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீப ஆராதனை நடைபெற்றது.

144 தடை உத்தரவின் காரணமாக அலங்கார மண்டபத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நவராத்திரி உற்சவத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில் தகுந்த இடைவெளியுடன் முதல் நாள் உற்சவம் நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.